உள்ளூர் செய்திகள்

இன்றே இப்போதே நடக்கும்

மந்திரங்களின் ராஜா என போற்றப்படும் மந்திர ராஜபத ஸ்தோத்திரம், 'வ்ருத்தோத்புல்ல விசாலாக்ஷம்' என்று சமஸ்கிருதத்தில் துவங்குகிறது. நாம் நினைப்பது இன்றே நடக்க வேண்டும் என்றால், நரசிம்மரை வணங்கி இதைச் சொல்ல வேண்டும். திருமணத்தடை, குழந்தையின்மை, தம்பதி கருத்துவேறுபாடு நீங்கி சேருதல், தொழில் மந்தம், கடன் பிரச்னை போன்றவை நீங்க இதை படிக்கலாம்.தேடிடும் அடியவர் சிந்தை மகிழநாடிடும் அகன்ற நற்கண் உடையீர்!திடுமெனும் அண்டம் சிம்மக் குரலால்நெடுமால் உருவே; நடுக்குறு வடிவே!அடியேன் பணிந்தேன் அடிமலர் போற்றி!................................................................திதியின் மகனாய், தேவர் பகையாய்உதித்த இரணியன் உலகில் எவரும்அழிக்க இயலாதென்று அகந்தை கொண்டான்கிழித்தே நகத்தால் கோட்டைக் களைந்தீர்!தொழுவேன் வீரம்; துதித்தேன் போற்றி!................................................................திருவடி பாதலம் தீண்டும்; நெடுமால்திருமுடி தீண்டும் தேவர் உலகம்!கரங்கள் திண்தோள் கடக்கும் எண்திசைஉருவோ நிறைக்கும் உருள் பேரண்டம்திருமால் அவரின் திருவடி போற்றி!................................................................கதிரும் நிலவும் கனலும் விண்மீன்உதிர்க்கும் ஒளியை உம்மிடம் பெற்றேஅத்தகு ஒளியின் அளப்பரு வடிவே!நித்தமும் உம்மை நினைத்தே பணிவேன்.................................................................புலன்கள் மற்றும் பொறிகள் இன்றியேஉலகில் நடப்பவை உணரும் திறமே!எல்லாத் திக்கும் எட்டும் பார்வைவல்லவர் திருமுகம் வணங்கினேன் போற்றி!...............................................................அடியவர்க்காக அழகிய மனிதனாய்கொடிய அசுரர்க்குக் கோர சிம்மமாய்ப்பிடரி முடியும் கோரைப் பற்களும்சுடரொளி வீசத் தோன்றிய சிம்மரே!அடியேன் உந்தன் அடிமலர் பணிந்தேன்................................................................சிந்தையில் உன்னைத் துதித்த கணமேநிந்தை செய் அசுரர், பூத வேதாளம்நடுங்கச் செய்யும் திறமுடையவரே!ஒடுக்குவீர் நோயை; ஓட்டுவீர் எதிரிகள்நரசிம்ம தேவே! நான் உனைப் பணிந்தேன்...............................................................அண்டிய பேர்க்கு அளிப்பீர் நலன்கள்!எண்ணரும் நலன்கள் என்றும் அளிப்பதால்செந்திரு பத்ரைத் தாயின் அன்பரே!வந்தனை செய்தேன்; வாழ்த்திப் பணிந்தேன்...............................................................வாழ்வின் முடிவில் வந்திடும் காலனைத்தாழ்வுறச் செய்து சங்கடம் தீர்ப்பீர்!எமன் தனக்கே எமன் ஆவீர்!தயவுடன் பக்தரின் பகையை அழிப்பீர்!நயந்துணைத் தொழுவேன் நரசிம்ம போற்றி!எவரின் அடியின் ஆன்ம அர்ப்பணம்தவமாய்ச் செய்தால் மேன்மை சேருமோஎவரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம்தவறுகள் எல்லாம் சிதறி ஓடுமோஅவரை நரசிம்ம தேவைப் பணிந்தேன்.....................................................................இப்பூவுலகின் உயிர்கள் போலேஅப்பால் இருக்கும் அனைத்து உயிரும்உனக்கே அடிமை ஆவதால் நானும்உனக்கே அடிமை! உணர்ந்தேன் தேவா!உன்னையே பணிந்தேன் ஏற்பாய் சரணம்!....................................................................சிறியேன் அரிபால் திளைத்த அன்பால்நெறியுடன் நவின்ற துதியினை முப்பால்ஓதிடப் பெறுவான் ஓங்கிய செல்வம்தீதில் அழகுடன் அறிவும் ஆயுளும்....................................................................சினமும் வீரமும் தனித்த ஒளியும்அனைத்து திக்கும் அளக்கும் பார்வையும்கொண்டவர் திருமால்; கொடுப்பார் நன்மைகள்!எதிரிக்கு அச்சமாய் எமனுக்கு எமனாய்ச்சிதறிட வைப்பார் சேவடி போற்றி!.................................................................ஓம் லட்சுமி நரசிம்ம தேவே போற்றி!ஓம் லட்சுமித் தாயே போற்றி!ஓம் பூமா தேவியே போற்றி!ஓம் நீளா தேவியே போற்றி!வ.விஜயலட்சுமி