உள்ளூர் செய்திகள்

கடனை நான் அடைக்கிறேன்

நபிகள் நாயகத்திடம் தொழவைப்பதற்காக இறந்துபோன ஒருவருடைய ஜனாஸா கொண்டுவரப்பட்டது. அப்போது அவர், ''இறந்துபோன இவர்மீது ஏதேனும் கடன் தொகை பாக்கியுள்ளதா'' எனக்கேட்டார். அதற்கு மக்கள், ''ஆம்'' என்றனர். ''கடனை நிறைவேற்றும் அளவுக்கு அவர் ஏதேனும் பொருளை விட்டுச் சென்றுள்ளாரா'' என மீண்டும் கேட்டதற்கு, ''இல்லை'' என பதில் வந்தது. ''அவ்வாறென்றால் நீங்களே அவருக்கு ஜனாஸா தொழுது கொள்ளுங்கள். (நான் தொழமாட்டேன்)'' என்றார். இந்நிலையைக் கண்ட அலீ, ''அக்கடனை அடைக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன்'' என்றார். பிறகுதான் அவர் சம்மதித்தார். பின் அவர், ''அலீயே! இறைவன் உம்மை நரகத்தில் இருந்து காப்பாற்றுவானாக. ஒருவரது கடனை அடைக்கும் எவரையும் மறுமை நாளில் விடுதலை செய்யாமல் இருக்கமாட்டான்'' என்றார்.