கடமை... அது கடமை
UPDATED : மார் 22, 2024 | ADDED : மார் 22, 2024
ஹஜ்ரத் ஆதமை (அலை) நோக்கி 100 அல்லது 500 வருடங்கள் வரை வானவர்கள் 'ஸஜ்தா'வில் (வணங்குதல்) இருந்தனர். ஆனால் இப்லீஸ் என்பவர் ஸஜ்தா செய்யவில்லை. பிறகு வானவர்கள் தலையைத் துாக்கிப் பார்த்த போது, இப்லீஸ் கோரமான நிலையில் காட்சி அளித்தார். தங்களுக்கும் இந்த இழிவான நிலை ஏற்படாமல் இருக்க மீண்டும் ஒருமுறை அவர்கள் 'ஸஜ்தா' செய்தனர். இதனால்தான் தொழுகையில் ஒவ்வொரு 'ரக்அத்' திலும் இரண்டு தடவை 'ஸஜ்தா' செய்ய கடமையாக்கப்பட்டது. (ஸஜ்தா - தலையை மண்ணில் வைத்து தன் முழுமையான கீழ்ப்படிதலை இறைவனுக்கு வெளிப்படுத்தும் செயல்)