பொறுப்பாளர்
UPDATED : மே 17, 2024 | ADDED : மே 17, 2024
தோழர்களுடன் போர் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் நாயகம். அப்போது திடகாத்திரமான ஒருவர் அவ்வழியாக சென்றார். அவரைப் பார்த்ததும் அங்கிருந்தோர், ' உடல் உறுதி மிக்க இவர் நாம் ஈடுபட்டிருக்கும் போரில் பங்கேற்றால் நன்றாக இருக்கும்'' என்றனர். அதற்கு அவர், ' அவருக்கு அவசர வேலைகள் இருக்கலாம். குடும்பத்தினரை கவனிக்க போய்க் கொண்டிருப்பார். குடும்பத்தினருக்காக யார் ஒருவர் உழைக்கிறாரோ அவர் போகும் வழி நல்வழி. அவரை விட்டுவிடுங்கள் '' என்றார்.