ஆசை வார்த்தை
சுவர்க்கத்திற்குள் நுழைந்த இப்லீஸ், அங்கிருந்த முதல் தம்பதியரான ஹஜ்ரத் ஆதம், ஹஜ்ரத் ஹவ்வாவிடம் அன்புடன் பழகினான். ''யார் நீ? எங்களோடு இப்படி அன்புடன் பழகுகிறாயே'' எனக் கேட்டார் ஹஜ்ரத் ஆதம். அதற்கு இப்லீஸ் கண் கலங்கியபடி, ''என்னைத் தெரியவில்லையா உங்களுக்கு? நான்தான் அஜாஜீல் (இப்லீஸின் முந்தைய பெயர்). உங்களைப் படைக்கும் முன்பே இறைவன் என்னைப் படைத்து விட்டான். உங்களைப் பார்த்ததும் என் மனம் வருத்தப்படுகிறது. காரணம் சுவர்க்கத்தில் இருந்து நீங்கள் இருவரும் வெளியேற்றப்படப் போவதாக கேள்விப்பட்டேன்'' என்றான். இதை நம்பிய ஹஜ்ரத் ஆதம் வருத்தப்பட்டார். மேலும் இப்லீஸ், ''வருந்த வேண்டாம். சொல்வதை கேளுங்கள். இந்த சுவர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் பழத்தைச் சாப்பிட்டால் இங்கு நிரந்தரமாக வாழலாம்'' என ஆசை வார்த்தை கூறினான். ஏனென்றால் அந்த மரம் விஷ மரம். அதைச் சாப்பிட்ட அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.