பெண்ணிடம் வீரமா...
UPDATED : ஜூன் 21, 2024 | ADDED : ஜூன் 21, 2024
ஹலரத் ஹம்ஸா, அலீ, அபூதுஜானா ஆகிய மூவரும் தங்களுக்கு எதிராக நின்ற குரைஷிகளின் படைக்குள் புகுந்தனர். அங்கு இஸ்லாத்தின் விரோதியான ஹிந்தா (அபூஸூப்யானின் மனைவி) நிற்பதைக் கண்டார் அபூதுஜானா. அவளைக் கொல்ல வாளை உயர்த்திய நிலையில், 'ஒரு பெண்ணிடம் வீரத்தை காட்டுவதா' என எண்ணி திரும்பிச் சென்றார். மறுபுறம் ஹம்ஸா இரு கைகளிலும் வாளேந்தி குரைஷிகளை வெட்டி வீழ்த்தினார். அப்போது குரைஷிகளின் அடிமையாக இருந்த வஹ்ஷி தாக்க வந்தார். காரணம் ஹம்ஸாவை வெட்டினால் அவருக்கு அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்காக ஈட்டியை வஹ்ஷி வீசியதால் நிலைகுலைந்த ஹம்ஸா உயிர் நீத்தார்.