உள்ளூர் செய்திகள்

பிறருக்கு இடம் கொடுங்கள்

ஒருமுறை கிராமவாசி ஒருவர் பள்ளிவாசலுக்கு வந்த போது நாயகம், சற்று விலகி உட்கார இடம் கொடுத்தார். அப்போது கிராமவாசி, “நிறைய இடம் இருக்கிறதே. இருந்தாலும் ஏன் அசைந்து கொடுத்தீர்கள்” எனக்கேட்டார். ''ஒருவர் சபையில் இருக்கும் போது யாராவது வந்தால், அவருக்கு இடம் கொடுப்பது கடமை” என்றார்.பார்த்தீர்களா... இன்று பலரும் ரயில், பேருந்தில் வரும் வயதானவர்கள், கர்ப்பிணிகளுக்கு இடமே கொடுப்பதில்லை. கேட்டால் 'நான் பணம் கொடுத்துதானே டிக்கெட் வாங்கினேன். இவர்கள் இப்போதுதானே ஏறினார்கள். சற்றுநேரம் நிற்கட்டுமே' என எகத்தாளம் பேசுவார்கள். இதைப்பார்த்தாவது இப்படிப்பட்டோர் திருந்தலாமே.