உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தி.மு.க., - எம்.பி., கனிமொழி: 'வட மாநிலங்களில் நடக்கும் பெண் உரிமைக்கான போராட்டங்களில் கூட, ஈ.வெ.ராமசாமியின் படத்தை கையில் துாக்கி பிடிக்கும் நிலை இருக்கிறது. அதனால், பா.ஜ.,வுக்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தொடர்ந்து நம்மை எதிர்க்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து எதிர்க்க, எதிர்க்கத் தான், அடுத்த தலைமுறையினர் மனதில், ஈ.வெ.ராமசாமியை விதைக்க முடியும். டவுட் தனபாலு: பார்த்தீங்களா... ஒரு காலத்துல தமிழகத்தில் பா.ஜ., இல்லவே இல்லன்னு சொன்ன தி.மு.க., இன்றைக்கு அவங்க எதிர்ப்பில் தான் நாங்க வளர முடியும்னு சொல்ற அளவுக்கு நிலைமை மாறிடுச்சே... இதுல இருந்தே, தமிழகத்தில் பா.ஜ., பலமாகிட்டு வருவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அம்மா உணவகங்கள் சரியாக செயல்படவில்லை. சென்னையில், 407 உணவகங்கள் இருந்த நிலையில், 19 உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மூன்றாண்டு களாக முதல்வர் ஸ்டாலின் ஏன் ஆய்வு செய்யவில்லை. அந்த உணவகத்துக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதால், வேறு வழியின்றி ஆய்வு செய்வதாக நாடகமாடுகிறார்.டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சியில் விலைவாசி எல்லாம் ஏறிடுச்சு... இதனால, மக்கள் மலிவு விலை உணவகங்களை நோக்கி படையெடுத்து வருவாங்க... அதற்கேற்ப, அவற்றை தரம் உயர்த்தினா, சட்டசபை தேர்தல்ல சாதகமா இருக்கும்னு, ஆளுங்கட்சியினர் பார்வை அம்மா உணவகங்கள் பக்கம் திரும்பியுள்ளதோ என்ற, 'டவுட்' தான் வருது!தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: 'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க.,விடம் ஆட்சி அதிகாரம் குறித்து பேச வேண்டும்' என, கார்த்தி சிதம்பரம் பேசியது அவரது சொந்த கருத்து. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.டவுட் தனபாலு: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தந்தாலும், எம்.பி.,யாக இருக்கும் கார்த்தி அமைச்சராக போறதில்லை... எம்.எல்.ஏ.,வா இருக்கிறவங்களுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கும்... அந்த வகையில், உங்களுக்கும் சேர்த்து தான், கார்த்தி பேசிட்டு இருக்காரு என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
ஜூலை 23, 2024 16:47

சட்டசபையின் தேர்தல் நெருங்கும்போது கொஞ்சமாவது ஏழைப்பங்காளன் வேஷம் போடவேண்டாமா ?


Sridhar
ஜூலை 23, 2024 11:54

அந்த ஈன வெங்காயத்தைப்பத்தின உண்மை விஷயங்கள் எல்லாம் வெளியே வந்தபிறகும் இப்படி அந்த ஆளு பெயரை தைரியமா சொல்லிட்டு திரியரத்துக்கு ஒரு தனி தில்லு வேணும். ஒரு விஷயம் மட்டும் புரியல, இவிங்க அந்த தகவல்களை உண்மையில்லன்னு மறுக்கறாங்களா, இல்ல நாங்கல்லாம் அப்படிதான்யான்னு அசிங்கத்திலேயே பெருமை காண்கிறார்களா?


duruvasar
ஜூலை 23, 2024 10:51

தமிழ்நாட்டில் எந்த பெண்கள் ஊர்வலத்திலும் பெரியார் படத்தை கையிலேந்தி சென்ற காட்சியை சமீபகாலத்தில் கண்டதில்லை. நீங்கள் புகுந்திருந்த மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் தான் அதிகம் அதிலும் மற்ற மாநிலங்களில் நடைபெரும் பெண்களுக்கெதிரான நிகழ்வை சார்ந்தது தாகத்தான் இருக்கிறது.இது நடைமுறை எதார்த்தம்.


Barakat Ali
ஜூலை 23, 2024 10:43

பாஜகவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதே திமுகதான் ......


Sridhar
ஜூலை 23, 2024 13:14

தவறு. பாஜகாவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி கணிசமான வெற்றியும் பெற செய்தது, ஜெயலலிதா தான் அதற்குப்பிறகுதான் கட்டு ஒட்டிக்கொண்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை