உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இது உங்கள் இடம்: எம்.ஜி.ஆர்., சிவாஜியை வார்த்தெடுத்தது யார்?

இது உங்கள் இடம்: எம்.ஜி.ஆர்., சிவாஜியை வார்த்தெடுத்தது யார்?

ஏ.எஸ்.ஆதித்யா, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

திரைத்துறையினர் நடத்திய, 'கலைஞர் 100' விழா படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் ஒரு துணி கடை திறப்பு விழாவில், சினிமா நடிகை பங்கேற்றால் கூட, அது துணை நடிகையாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு பொதுமக்கள் திரண்டு விடுவர்.ஆனால், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும், உலக நாயகன் என்றும் தங்களை அடையாளப்படுத்தி வரும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பங்கேற்ற நிகழ்ச்சியில், காலி சேர்கள் அணிவகுத்து நின்ற காட்சியை பார்க்கையில் மிக பரிதாபமாக இருந்தது.திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ரஜினியும், ஒரே ஒரு எம்.பி., சீட்டுக்காக கமலும் தி.மு.க.,வின் ஜால்ராவாக மாறி இருப்பது, அப்பட்டமாகத் தெரிகிறது. இவர்கள், 'கருணாநிதி இல்லையெனில், தமிழ் சினிமாவே இல்லை; எம்.ஜி.ஆரும், சிவாஜியும் உச்சம் தொட கருணாநிதி தான் காரணமே' என்பது போன்ற ஒரு பொய்யான பிம்பத்தை கட்டமைக்கப் பார்க்கின்றனர்.எம்.ஜி.ஆர்., நடித்த படங்கள், 130; சிவாஜி நடித்த படங்கள், 288. இதில், கருணாநிதி கதை, வசனத்தில் இவர்கள் நடித்த படங்களின் எண்ணிக்கை, 10க்கும் குறைவு. மேலும், அவர்கள் தங்களது திறமையாலும், உழைப்பாலும், மக்கள் ஆதரவாலும் தான் பேரும், புகழும் பெற்றனரே தவிர, கருணாநிதியின் பங்களிப்பு இதில் எங்கு இருக்கிறது? தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான, பி.ஆர்.பந்துலு, ஏ.சி.திருலோகசந்தர், ப.நீலகண்டன், கே.சங்கர், ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பீம் சிங், ஏ.பி.நாகராஜன் ஆகியோர் தான் எம்.ஜி.ஆர்., சிவாஜியை வார்த்தெடுத்த சிற்பிகள்!இந்த இயக்குனர்களின் பெயரை இருட்டடிப்பு செய்து, காலாவதியான பராசக்தி வசனத்தையே பல்லவி பாடி, கருணாநிதியை முன்னிறுத்துகின்றனர். கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்திற்கும் தாங்கள் சார்ந்திருக்கும் திரைத்துறை மீது உண்மையிலேயே விசுவாசம் இருந்தால், இது போன்ற பழம்பெரும் இயக்குனர்களின் பெருமையை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் சுயநலத்திற்காக தி.மு.க.,வுக்கு ஜால்ரா அடிப்பதால், நடந்து முடிந்த கருணாநிதி நுாற்றாண்டு விழாவில், உங்களது ரசிகர்கள் கூட உங்கள் தரிசனத்திற்காக வரவில்லை பார்த்தீர்களா?தங்களது அபிமான நடிகர்களின் கட் -அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடத்தி, படத்தின் வெற்றிக்காக மண் சோறு தின்னும் பைத்தியக்கார ரசிகர்கள் நிறைந்த தமிழகத்தில், இரு மாபெரும் நடிகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி, அவர்களது ரசிகர்களாலேயே புறக்கணிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Anantharaman Srinivasan
ஜன 17, 2024 00:20

பைத்தியக்கார ரசிகர்கள்.. நல்லவேளை கட்சி ஆரம்பிக்கலே. நாடு தப்பியது.


Anantharaman Srinivasan
ஜன 17, 2024 00:15

கிட்டத்தட்ட நூறாண்டுகள் (97) வாழ்ந்த கருணாநிதி, கமலுக்கும் ரஜினிக்கும் தலாயிரண்டு படங்களுக்கு கதை வசனமெழுதி நடிக்க. வைத்திருந்தால் ஒருவேளை சிவாஜி எம்ஜியாரை மேற்கோள் காட்ட ரஜினிக்கு அவசியமில்லாமல் போயிருக்கும்.


Vijay D Ratnam
ஜன 16, 2024 20:56

பராசக்தி என்ற மேடை நாடகத்துக்கு வசனம் எழுத்தியவர் பாலசுந்தரம் என்பவர். நாற்பதுகளில் நிறைய நாடகங்கள் எழுதி இருக்கிறார். அவரை பாவலர் பாலசுந்தரம் என்று சொல்வார்கள். அந்த நாடகத்தை சினிமாவாக்க ஏ.வி.எம் நிறுவனம் முடிவு செய்து படத்திற்கு வசனம் எழுத அந்த நாடகத்தை எழுதிய ஒரிஜினல் வசனகர்த்தா பாலசுந்தரம்தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு அவரை மாற்றி விட்டு அப்போது பிரபலமாக இருந்த கதாசிரியர் திருவாரூர் தங்கராஜை ஒப்பந்தம் செய்தனர். சில விஷயங்களில் அவர் தயாரிப்பு நிறுவனத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட நாடக வசனத்தை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ண நான் எதற்கு என்று விலக, அதற்குப் பிறகு அந்த இடத்திற்கு வசனம் எழுத வந்தவர்தான் மு.கருணாநிதி. அதாவது பாலசுந்தரம் எழுதிய பராசக்தி நாடக வசனத்தை சினிமா வசனமாக பட்டி டிங்கரிங் பார்த்தவர். அவ்ளோதான். அது போல பம்மல் கல்யாணசம்பந்த முதலியார் எழுதிய மனோகரா நாடக வசனத்தை சினிமா வசனமாக பட்டி டிங்கரிங் பார்த்தவர் கருணாநிதி. வரலாறு முக்கியம் நண்பர்களே. அசமந்தமா இருந்தா திருவாசகத்தை எழுதியவரே முத்தமிழ் அறிஞர் கருணாநிதிதான் என்று லேபிளை ஓட்டிட்டு பூடுவாய்ங்க.


Velan Iyengaar
ஜன 16, 2024 22:52

காசா பணமா ..அள்ளி விடு சங்கிகளுக்கு போலி வாட்ஸப்பை பரவவிடுவது புனைவுகளை எழுதுவது ஒன்றும் புதிதல்ல...


Yaro Oruvan
ஜன 22, 2024 23:35

அப்ப அது பட்டி டிங்கரிங்தானா.. அதான பாத்தென்.. அடுத்தவனை சுரண்டாம நம்மால உசுர் வாழ முடியாதே.. அப்பவே ஆரம்பம்


Siva
ஜன 16, 2024 17:01

மேடையில் பொய் சொல்ல எவனுமே அஞ்சுவதில்லை. தங்கள் சுயநலத்திற்காக எதை உளறவும் தயங்குவதில்லை.


DVRR
ஜன 16, 2024 16:42

இது எப்படி இருக்கின்றதென்றால் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஒரு இடத்தில் சென்று பார்த்தாராம் அதை ஆய்வு என்று சொல்கின்றார்கள் என்பது போல இருக்கின்றது.


r srinivasan
ஜன 16, 2024 14:56

கமலஹாசன் மற்றும் ரஜனி காந்த இருவருமே வயது எழுவதை கடந்தவர்கள். இன்னும் பணத்தாசை விடவில்லை. ரசிகர்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள் .


Manikandan S
ஜன 16, 2024 14:37

ரஜினி, கமல் தற்போதைய பேச்சில் ஜால்ரா தனம் இருந்தது உண்மை கருணாநிதியை புகழ்வதாக எண்ணிக் கொண்டு உளரினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது., மக்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பவில்லை., மக்கள் விரும்பாத நிலையில் மகேசனே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாலும் இப்படி தான் இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் கமல்ஹாசன்/ரஜினிகாந்த் இருவரின் இமேஜ் குறைந்து விட்டதாக நான் கருதவில்லை.


Hari
ஜன 16, 2024 13:36

அவனே ஒரு யுனெஸ்கோ திருடன் இதெல்லாம் எங்கே புரியும் தமிழனுக்கு.


Yaro Oruvan
ஜன 16, 2024 12:42

பின்னொரு காலத்துல ஸ்டாலின் நூறுன்னு (நடந்தா)... அதுல சொல்ளுவானுவ 'ரஜினி கமல் இருவரையும் வளர்த்தது ஸ்டாலீனும் உதயநிதியும் (ஏன் இன்பநிதியும் சேந்து உதவினார்).. அப்ப தெரியும் இப்ப இந்த ரெண்டு நடிகர்கள் பேசிய பேச்சு அபத்தம்னு அந்த நடிகர்களுக்கு ...


Velan Iyengaar
ஜன 16, 2024 14:21

உண்மை எப்போதும் கசக்கும்


kumar
ஜன 16, 2024 23:10

என்ன ஒய் புனை பெயர் ஸ்வாமி , ரொம்ப கசக்குதோ ?


Yaro Oruvan
ஜன 16, 2024 12:38

அடடே மிஸ்டர் ஐயங்கார்.. பா.விஜய் (இளைஞ்சன்) / பிரசாந்த் (பொன்னர் சங்கர்) இவுக ரெண்டுபேரையும் சினிமாவை விட்டு விரட்டிய பெருமை மஞ்சள் மகிமைக்கு மட்டுமே.. ஏதாவது பதில் கமெண்ட் போட்டா உளியின் ஓசை படத்த பாக்க வச்சிருவோம் ஜாக்கிறத..