உள்ளூர் செய்திகள்

பக்க வாத்தியம்

துண்டு போட்டு வைக்கிறாரோ!'மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம், லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், தமிழக பா.ஜ., சார்பில் சென்னையில் நடந்தது.இதில், தமிழக பா.ஜ., மாநில செயலர் எஸ்.ஜி.சூர்யா பேசுகையில், 'கடந்த 2022 உள்ளாட்சி தேர்தலில், வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட எட்டு வார்டுகளில், பா.ஜ., 15,000 ஓட்டுகள் பெற்றது. தற்போது லோக்சபா தேர்தலில், வேளச்சேரியில் 51,000 ஓட்டுகளை வாங்கி உள்ளோம். வரும் சட்டசபை தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் வென்றே தீருவோம்' என்றார்.இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'தி.மு.க., வுக்கு கடும் போட்டி தரும் வகையில் வேளச்சேரியில் பா.ஜ., அபாரமாக வளர்ந்திருக்குன்னு மார்தட்டி பேசுறாரே...' என முணுமுணுக்க, மற்றொருவர், 'அனேகமா இந்த தொகுதியில் இவரே போட்டியிட துண்டு போட்டு வைக்கிறாரோ...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 16, 2024 16:48

சில ஆயிரம் ஓட்டுக்களை வாங்கி விட்டதால் தொகுதியே தங்கள் வசம் வந்துவிட்டது போலப் பேசுகிறாரே


சமீபத்திய செய்தி