உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஆந்திர உயர்நீதிமன்றத்தின் சர்ச்சை உத்தரவு ரத்து

ஆந்திர உயர்நீதிமன்றத்தின் சர்ச்சை உத்தரவு ரத்து

புதுடில்லி: உச்சநீதிமன்ற கொலிஜியத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆந்திர உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து செய்துள்ளது. கடந்த 2020ல் இரண்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டது. அப்போது இது தொடர்பான வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் கொலிஜியத்தின் இந்த முடிவை கண்டித்தும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்தும் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார். நீதிபதி குமாரின் இந்த உத்தரவை எதிர்த்து ஆந்திர அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொலிஜியத்துக்கு கண்டனம் தெரிவித்தும் முதல்வரை விமர்சித்தும் உத்தரவிட்ட ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sathyam
பிப் 10, 2024 11:20

என்பது அயீரம் கேஸ் பெண்டிங் ல இருக்கு வெக்கம் சூடு சொரணை பொறுப்பு எதுவும் இல்லை கேஸ் நிலுவைல இருக்கு உங்களுக்கு கொஞ்சமான பொது விழாவுல வரீங்க அங்க வந்து எதுக்கு வெட்டி லெக்சுர் ஏழாம் , சாத்தியமா


Sathyam
பிப் 10, 2024 11:16

நீங்கள் (வெட்கமற்ற உச்ச நீதிமன்றம்) விரிவுரை வழங்குவதற்கும் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கும் பதிலாக GOI உருவாக்கிய NJAC மசோதாவை ஏற்கவும். முதலில் குறைபாடுகள் மற்றும் ஊழல் நிறைந்த கொலீஜியம் அமைப்பில் இருந்து நீங்கள் வெளியேறுங்கள். உங்களுக்கு முன்னால் விரிவுரைகளை வழங்கவும் மற்றும் அனைத்து அரசாங்க மசோதாக்கள் அல்லது சட்டங்களில் தலையிடவும் எண்ணத்தில் இருக்கிறீர்கள் என் பிரபுக்கள் ஏன் இந்த பழைய பிரிட்டிஷ் அமைப்பு, நீங்கள் முதலில் காலனித்துவ அடிமை கலாச்சாரத்திலிருந்து வெளியே வந்தீர்கள். நீங்கள் கட்டளைக் குடிமக்களைப் போலவும், தேசத்தின் குடிமக்களுக்கு நீங்கள் பொறுப்புக்கூறக்கூடியவர்களாகவும், அக்கறையுள்ளவர்களாகவும் இருக்கிறீர்கள்


Sathyam
பிப் 10, 2024 11:15

உச்ச நீதி மன்றம் பாசாங்குக்காரர்களை இரட்டை வேடம் போடுங்கள், முதலில் நீங்கள் கொலீஜியம் அமைப்பில் இருந்து வெளியே வந்து NJAC ஐ ஏற்றுக் கொள்ளுங்கள். முதலில் நீங்கள் RTI சட்டத்தின் கீழ் வந்து, அனைத்து நீதிமன்றங்களிலும் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதன் மூலம் தேசத்தின் பணத்தை கொடூரமாக வீணடிப்பதால் வெளிப்படைத்தன்மையுடன் இருங்கள். தயவு செய்து எந்தவொரு பொது விழாவிற்கும் செல்லாதீர்கள், சொற்பொழிவு செய்யாதீர்கள் அல்லது ஏளனம் செய்யாதீர்கள்


தத்வமசி
பிப் 10, 2024 11:07

same side goal போட்டவுடன் கடுப்பாகி விட்டார்கள் போல.


GMM
பிப் 10, 2024 08:51

ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவு / எந்த உத்தரவும் அதன் எல்லையில் மட்டும் செல்லும். கொலீஜியம் ஆந்திர நீதிமன்ற எல்லையில் இல்லை. தேசிய உச்ச நீதிமன்றத்தை பாராட்ட / கண்டிக்க மாநில நீதிமன்ற இருக்கையில் அமர்ந்து செயல்பட கூடாது. (பொது இடங்களில் கருத்து தெரிவிக்கலாம்). எல்லை, அதிகார மீறலை தண்டிக்க வேண்டும்.


Arul Narayanan
பிப் 10, 2024 08:34

வழக்கு யார் போட்டது? ஆந்திர அரசு ஏன் மேல் முறையீடு செய்தது?


Dharmavaan
பிப் 10, 2024 07:00

கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும் இது மத்திய அரசை குறைத்து மாநில அரசை போற்றும்


Kasimani Baskaran
பிப் 10, 2024 06:45

நாட்டுக்கு நல்லதல்ல. சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


(null)
பிப் 10, 2024 02:56

Collegium system should be eradicated otherwise should be implemented in all fields, Police Officers should be selected in same way, IAS officers even CMs


புதிய வீடியோ