கவிதைச் சோலை
எவ்வளவு பிடிக்கும்என்னை பிடிக்குமா பிடிக்காதா என்றகேள்வியை முன் வைத்தேதுவங்குகிறாய் ஒவ்வொரு முறையும்உரையாடலை!பிடிக்கும் மிகப்பிடிக்குமெனரகசிய வார்த்தைகளை அள்ளி வீசினாலும்எவ்வளவு பிடிக்கும் எனஅடுத்த கேள்வியை நகர்த்துகிறாய்!உலகளவு பிடிக்குமெனஉதாரணம் காட்டி சிரித்தால்உலகமே இப்போது கைக்குள் அடக்கம்வேறு ஏதேனும் சொல் என்றுஎன்னை சோதனைக்குள்ளாக்குகிறாய்!ஆகாயமளவு பிடிக்குமென்றுகைகளை விரித்து உன் கண்களை நோக்கினேன்பறவைகளின்இறகுகள் தொடும் உயரம் தான் ஆகாயமெனஅதற்கும் பழிப்புக் காட்டி சிரிக்கிறாய்!கடலளவு பிடிக்குமெனகைவிரல் நகத்தை கடிக்கத் துவங்கினேன்உன் மனதை விட சிறியதெனஅதற்கும் முற்றும் போட்டாய்!என் உயிரளவு பிடிக்குமெனஉன்னை கட்டிக் கொண்டேன்பிறகொன்றும் பேசவேயில்லை நீ...நானும்!— இ.எஸ்.லலிதாமதி,சென்னை.