உள்ளூர் செய்திகள்

இளவரசிக்கு வந்த சோதனை!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியின் திருமணம் முடிந்து, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இரு குழந்தைகளும் பிறந்து விட்ட நிலையில், இந்நான்கு ஆண்டுகளும் சந்தோஷமாக உலா வந்த கேட், இப்போது, சோகத்தில் மூழ்கியுள்ளார். காரணம், திருமணத்துக்கு முன், வில்லியமும், கேட்டும், செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலையில், ஒன்றாக படித்தனர்; அங்கு தான், இருவருக்கும் காதல் மலர்ந்தது.காதலித்த நாட்களில், இருவரும், தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசுவர். அப்போது, வில்லியமின் பாட்டியும், பிரிட்டன் ராணியுமான எலிசபெத் பற்றியும், இளவரசி டயானா மற்றும் தம்பி ஹாரி ஆகியோரைப் பற்றி, எக்குத் தப்பாக கிண்டலும், கேலியும் செய்து பேசியுள்ளார் கேட்.அந்த தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும், பிரிட்டனில் உள்ள ஒரு பத்திரிகை நிறுவனம் ஒட்டு கேட்டு பதிவு செய்துள்ளது. அதை, விரைவில் வெளியிடவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 'அந்த தொலைபேசி உரையாடல் பதிவு வெளியானால், ராணி எலிசபெத் உள்ளிட்ட ராஜ குடும்பத்தினர் தன் மீது வைத்துள்ள மரியாதை காற்றில் பறந்து விடுமே...' என, தற்போது கலங்கிப் போயுள்ளார் கேட்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !