உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சொல் வியாபாரம்!சொன்ன சொல்லைசத்தியமாக பாவிக்கின்றனர்சத்தியவான்கள்!சொல்லும் சொற்களில்அசிங்க அர்த்தங்களைச் சேர்த்துதுச்சமாய் பார்க்க வைக்கின்றனர்அயோக்கியர்கள்!யோசித்து யோசித்துசொற்களை அலங்காரமாய்அடுக்குகின்றனர்அரசியல்வாதிகள்!சொன்ன சொல்லைகாப்பாற்றவில்லை என்றால்உயிரையும் விடுகின்றனர்கவரிமான் இனத்தினர்!சொற்களுக்கு இடைப்பட்டஇடைவெளிகளில்புதிய அர்த்தங்களைகற்பித்து கொள்கின்றனர்முட்டாள்கள்!அர்த்தமற்ற சொற்களையேஎப்போதும் பேசுகின்றனர்அஞ்ஞானிகள்!வழிகாட்டும் சொற்களையேஎப்போதும் பேசுகின்றனர்ஞானிகள்!தங்கள் சொற்களைஒரு பொருட்டாகமதிப்பதில்லைசுயநலமிகள்!சொற்களைகவிதைகளாகஅழகுப்படுத்துகின்றனர்கவிஞர்கள்!எப்போதும்சொல் ஒன்றும்செயல் ஒன்றுமாய்இருந்து விடுகின்றனர்சராசரி மனிதர்கள்!சொற்களைபணம் காய்க்கும் மரமாகபாவித்துவியாபாரம் செய்கின்றனர்சொல் வியாபாரிகள்!— ஸ்ரீநிவாஸ் பிரபு, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !