கவிதைச்சோலை!
ஒரு மழலையின் குரல்!நான் கருவில்உருவாகும் முன்னரேபள்ளியில் இடம்பிடித்து விட்டனராம்!நான் பேச முயன்றதுதாய்மொழி அல்லஆங்கிலத்தின்அறிமுகம்!நடந்தவுடன் வந்ததுஇரு சக்கர வண்டி...முதலில் சிறியதுஅப்புறம் பெரியது!நான் விளையாடஎத்தனை வகைகள்...பந்தாட்டம், சதுரங்கம்நீச்சல் என்றுஎத்தனையோ வகுப்புகள்!ஓயாத படிப்பு நடுவேஇவைகளையும்படிக்க வேண்டியநிர்பந்தம், ஆணை!கணினி தான் என்நெருங்கிய நண்பன்கைபேசி தான்என் காவலன்!நான் எனக்காகவாழப் பிறந்தவனா...இல்லை உங்கள்நிறைவேறாக் கனவுகளைநிஜமாக்க வந்தவனா?அன்புள்ள பெற்றோரே...நான் ஒரு தனி மனிதனாஇல்லை சாவி கொடுத்தால்ஆட வேண்டிய பொம்மையா?— ஜி.சுவாமிநாதன், சென்னை.