கவிதைச்சோலை!
ஏன் வளர்கின்றன பிரச்னைகள்கடல் அலைகள் போன்றுபோராட்டங்கள்தொடர் கதையாகிறதுஇந்நாட்டில்!எந்த ஆட்சியிலும்எந்த திட்ட அறிவிப்புகளிலும்கட்சிகளும், மக்களும்எதிர்க்கின்றனர்!போராட்டங்களில்கூட்டம் கூடுகிறதுவன்முறை தொடர்கிறதுமக்கள் பாதிக்கின்றனர்!பொது சொத்துசேதப்படுத்தப்படுகிறதுகாவலர்கள்தாக்கப்படுகின்றனர்!கட்சிகள், அமைப்புகள்இயக்கங்கள், அணிகள்மோதிக் கொள்கின்றனசுயநலத்திற்காக!திட்டங்கள், சட்டங்கள்தீர்வு காணப்படாமல்திகைக்கின்றனநீதி மன்றங்கள்!புண்ணுக்கு புனுகுதடவுவது மாதிரிகிடப்பில் போடப்படுகின்றனபிரச்னைகள்!நல்லவர்களும், நேர்மையானவர்களும்கல்வியாளர்களும், அறிவியலாளர்களும்அரசியல் அதிகாரத்திற்குவர விரும்பாமல்ஒதுங்கி, விலகி மவுனமாகஇருப்பதாலேயேதீர்க்கப்படாமல் வளர்கின்றனபிரச்னைகள்!— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.