கவிதைச்சோலை!
கற்றுக்கொள்!மரத்திலிருந்துஉதிர்ந்து மண்ணில்விழுந்தாலும்மாறா புன்னகைகொள்ளும் தன்மையைமலரிடம் கற்றுக்கொள்!இலையுதிர் காலத்திற்காகவருத்தப்படாமல்மீண்டும் வசந்தத்திற்காகதன்னை புதுப்பித்துதுளிர்க்கும் தன்மையைமரத்திடம் கற்றுக்கொள்!புதைத்தாலும்மடிந்து விடாமல் விருட்சமாய்வளரும் விடாமுயற்சியைவிதையிடம் கற்றுக்கொள்!முட்களையும் கூடாக்கிவாழும் மன வலிமையைபறவைகளிடம் கற்றுக்கொள்!பருக்கை சோறென்றாலும்பகிர்ந்துண்ணும்சமத்துவத்தை, காக்கையிடம்கற்றுக்கொள்!வேப்ப மரத்தில் கட்டினாலும்கசக்காமல் இனிக்கும்தேன் கூடையை தரும்தனித்துவத்தை தேனியிடம்கற்றுக்கொள்!கடும் பசியென்றாலும்இரையுண்ண வரிசையில்செல்லும் ஒழுங்கைஎறும்புகளிடம் கற்றுக்கொள்!மலையில் அருவியாய்தரையில் நதியாய்மாறிக்கொள்ளும்சமயோஜிதத்தை தண்ணீரிடம்கற்றுக்கொள்!மாலையில் அஸ்தமித்தாலும்விடியலில் ஒளியாய்உதயமாகும் புத்துணர்ச்சியைகதிரவனிடம் கற்றுக்கொள்!மேடு - பள்ளம், உயர்வு - தாழ்வுஎன்று பேதம் பாராமல்எல்லாருக்கும்சமமாய் பொழியும்மகோன்னத மனதைமழையிடம் கற்றுக்கொள்!கு. வைரச்சந்திரன், திருச்சி.