கவிதைச்சோலை!
ஏற்றுவோம் தீபம்!தீபம் ஏற்றிடுவோம்சருகான கனவெல்லாம்பட்டு சரிகையாய் பளபளக்கசரிவில்லா வாழ்வு பெறஏற்றுவோம் தீபம்!பாழும் தீமை மாய்ந்திடபாவ செயல்கள் நீங்கிடநாளை உலகம் செழித்திடஏற்றுவோம் தீபம்!மடமை இருள் அகலஅக்கிரம சிறகுகள் பொசுங்கஅநீதி அரக்கனின்ஆயுளை முடிக்கஏற்றுவோம் தீபம்!நீதியும், தர்மமும் தழைக்கஜாதி, மத, பேதமற்ற சமுதாயம் மலரஏற்றமிகு வாழ்வு எங்கும் சிறக்கஏற்றுவோம் தீபம்!அச்சமும், பேடிமையும்அடிமை சிறுமதியும் ஒழியஅதிகார மோகமின்றிஆதிக்க தாகமின்றிபொறுப்புகளை கடமையாக கருதஏற்றுவோம் தீபம்!மனித இனம்மங்கள வாழ்வு பெறபூமி பந்தில் நம் முகவரியைஆழப் பதிக்கபாரதத்தின் பெருமையைபாரெங்கும் பரப்பஏற்றுவோம் தீபம்!வையம் நமக்கே சொந்தம்வாழ பிறந்தோம் வாழ்வோம்உழைப்போம் உயர்வோம்விடி விளக்காய் திகழ்வோம்வாழிய... வாழியவே!செல்வி நடேசன், சென்னை.