உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாழப் பழகுகிறேன்!

* சுற்றத்தாரின் சுயநலங்கள்மனச்சூழலை பாதிக்காமல்சூழ்நிலையை சாதகமாக்கிசுகமாய் வாழப் பழகுகிறேன்...

* உறவுகளின் உள்குத்தலின்றிஉணர்வாய் உள்ளன்புடன்உரிமையில் நேர்மையாய்உறவாடி வாழப் பழகுகிறேன்...

* மனசாட்சிக்கு பயந்தும்மற்றவர்களை மதித்தும்கடவுளின் பயத்தில்உத்தமமாய் வாழப் பழகுகிறேன்...

* மதிகெட்டவரின் வார்த்தைகளைசெவி கேட்டாலும்இவ்விந்தை உலகத்தில் - என்சிந்தைக்கெட்டாமல் வாழப் பழகுகிறேன்...

* முகத்தின் முன் சிரித்தும்முதுகிற்குப் பின் கரித்தும்பேசும் வேடதாரிகளைவேரறுத்து வாழப் பழகுகிறேன்...

* சுயநலம் கெட்டுபொதுநலம் பேணும்மதிநலன் கேட்டு - இறைவனிடம்மன்றாடி வாழப் பழகுகிறேன்...

* அகவை எண்பது தாண்டியும்அண்டி வாழப் பழகிக் கொண்டிருக்கிறேன்...

* மனிதனைப் படிக்க... நான் மானிடனே...அவன் மனதினைப் படிக்க... நான் படைத்தவனல்லவே...

* ஆதலினால் வாழப் பழகிக் கொண்டிருக்கிறேன்...உலகே உன் மடி தாராயோ...

— ஸ்ரீபதி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !