உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாதவிடாய் நிற்கும் வயது மகளிர் ஆரோக்கியத்தை காக்க திட்டம்

மாதவிடாய் நிற்கும் வயது மகளிர் ஆரோக்கியத்தை காக்க திட்டம்

பெங்களூரு: பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் போது ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், கர்நாடக அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் தருணத்தில், உடல் ஆரோக்கிய பிரச்னை, மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், கர்நாடக சுகாதாரத்துறை, ருது தாரே என்ற திட்டத்தை வகுத்துள்ளது. 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் ஆரோக்கிய பிரச்னைகள், மன அழுத்தத்தை சரி செய்து கொள்ள, ஆலோசனை கமிட்டியின் சிபாரிசுபடி, இத்திட்டம் வகுக்கப்பட்டது. சோதனை முறையில், தட்சிண கன்னடாவில், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மூன்று மாதங்களுக்கு பின், மாநிலம் முழுதும் விஸ்தரிக்கப்படும். நடிகை ரம்யா இந்த திட்டத்தின் துாதராக இருப்பார். ஆரோக்கியம் குறித்து இவர் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார். நடுத்தர வயது பெண்களுக்கு, ஆரோக்கிய கார்டு வழங்கப்படும். மாதவிடாய் நிற்கும் தருணத்தில், எப்படி நடந்து கொள்வது, ஆரோக்கியத்தை காப்பாற்றுவது, ஊட்டச்சத்தை அதிகரிப்பது, எலும்புகள் ஆரோக்கியம், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது குறித்து, கன்னட மொழியில் கையேடு தயாரித்து பெண்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி