உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மே மாதத்தில் முக்கிய துறைகளின் வளர்ச்சி சரிவு

மே மாதத்தில் முக்கிய துறைகளின் வளர்ச்சி சரிவு

புதுடில்லி:நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் 6.30 சதவீதமாக சற்றே குறைந்துள்ளது.இந்த எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.70 சதவீதமாகவும்; கடந்தாண்டு மே மாதம், 5.20 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. வெப்ப அலை மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக வளர்ச்சி குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.எனினும், வெப்ப அலையினால் மின்சார தேவை அதிகரித்ததால், கடந்த மே மாதம் நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் தேவையும், உற்பத்தியும் அதிகரித்துள்ளது.எனினும், உரம், சிமென்ட் மற்றும் கச்சா எண்ணெய் துறைகளின் வளர்ச்சி மைனஸ் நிலையில் இருந்தது.எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும். நாட்டின் தொழில் துறை உற்பத்தியைக் கணக்கிடுவதில், இந்த எட்டு துறைகள், 40.27 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை