உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்

சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பிணையம் அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதமின்றி, உற்பத்திக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கான கடன் உத்தரவாத திட்டங்கள் குறித்த அறிவிப்பை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்வதற்கும், உலகளவில் போட்டியிடுவதற்கும் உதவும் வகையில் நிதி, ஒழுங்குமுறை மாற்றங்கள், தொழில்நுட்பம் மற்றும் அதன் உற்பத்தி உள்ளிட்டவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அரசு உருவாக்கி உள்ளது. இதனடிப்படையில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பிணையம் அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதமின்றி, உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கான கடன் உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படும். உற்பத்திக்கான கடன் உத்தரவாத திட்டமானது, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் அபாய தொகுப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதற்கென தனியாக அமைக்கப்பட்ட சுயநிதி உத்தரவாத நிதியானது, கடன் தொகை அதிகமாக இருக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும், 100 கோடி ரூபாய் வரை உத்தரவாத காப்பீட்டை வழங்கும். கடன் பெற்றவர், குறைக்கப்பட்ட கடன் நிலுவைத் தொகைக்கு முன், உத்தரவாத கட்டணத்தையும், வருடாந்திர உத்தரவாத கட்டணத்தையும் வழங்க வேண்டும்.தங்கள் கட்டுப் பாட்டை மீறிய கடன் அபாயங்களை கடந்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங் கள் தங்கள் வணிகத்தை தொடருவதற்கு, அந்நிறுவனங்களுக்கு கடன் உதவி தேவையாக உள்ளது. இக்கடன்களை அரசின் ஊக்குவிப்பு நிதியில் இருந்து உத்தரவாதத்தின் அடிப்படையில் கடன் கிடைப்பது ஆதரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை