உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ‘இ-20 பெட்ரோலில் பிரச்னை இல்லை’: பி.பி.சி.எல்., நிறுவனம் விளக்கம்

‘இ-20 பெட்ரோலில் பிரச்னை இல்லை’: பி.பி.சி.எல்., நிறுவனம் விளக்கம்

மும்பை: நாடு முழுதும் எத்தனால் கலப்பு பெட்ரோல், உரிய தரத் துடன் இருப்பதாக பி.பி.சி.எல்., எனும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, கர்நாடகாவில் பி.பி.சி.எல்., நடத்திய நுகர்வோர் விழிப்புணர்வு முகாமில், இ20 பெட்ரோலில் இருந்து தண்ணீரை பிரித்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனை குறித்த படம் சமூக வ லைதளங்களில் வெளியானது. அதில், பெட்ரோல் குறைவாகவும், எத்தனால் அதிகமாகவும் இருப்பதை போல் காணப்பட்டது சர்ச்சையை எழுப்பியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள பி.பி.சி.எல்., “பெட்ரோலுடன் தண்ணீர் சேர்க்கும்போது, எத்தனால் தனியாக பிரிய சிறிது நேரமாகும். அதற்குள், கலவை தெளிவடையாத நிலையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தவறுதலாக பகிரப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை