உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசின் முதுகெலும்பு கட்சியின் தொண்டர்கள்: ராகுல் "ஐஸ்"

காங்கிரசின் முதுகெலும்பு கட்சியின் தொண்டர்கள்: ராகுல் "ஐஸ்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பு தொண்டர்கள் தான் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு, 29 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நாளை(ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இந்நிலையில் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வீடியோ ஒன்றை ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

முதுகெலும்பு

வீடியோவில் ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பு தொண்டர்கள் தான். பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், நமது அரசியலமைப்புச் சட்டம், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் கமிஷன் மீது தாக்குதல் நடத்துக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., கொள்கைக்கு எதிராக நீங்கள் தெருக்களிலும், கிராமங்களிலும், எல்லா இடங்களிலும் போராடுகிறீர்கள்.

பாதுகாவலர்கள்

நீங்கள் தான் பாதுகாவலர்கள். மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், தேர்தல் வாக்குறுதியை உருவாக்க எங்களுக்கு உதவியுள்ளீர்கள். நாங்கள் கட்சி தொண்டர்களை நம்புகிறோம். நேசிக்கிறோம்!. கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ.,வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Azar Mufeen
ஏப் 18, 2024 23:35

காங்கிரஸ் கட்சியின் முதுகுஎலும்பு தொண்டர்கள் ராகுல் ஐஸ் இதையே மோடி சொன்னால் உருக்கம் இதுதான் நடுநிலை நாளிதலா


vijay
ஏப் 18, 2024 16:25

என்னாது காங்கிரஸில் அவ்வளோ தொண்டர்கள் இருக்கிறார்களா? சரிதான், முதலில் ஒழுங்காக தலைவரை விடுவாங்க அப்புறம் பாக்கலாம்


Hari Bojan
ஏப் 18, 2024 16:04

காங்கிரஸ் நாளையோடு அதோகதிதான்


தனி
ஏப் 18, 2024 15:26

கட்சியின் வாய் வயிறு, திங்க மட்டும்தான!!!


sridhar
ஏப் 18, 2024 15:06

காங்கிரஸ் ஒரு முதுகெலும்பு இல்லாத கட்சி , அதாவது தொண்டர்கள் இல்லாத கட்சி


பேசும் தமிழன்
ஏப் 18, 2024 14:51

அப்போ எதுக்கு கான் கிராஸ் கட்சி.... இத்தாலி குடும்பத்தை பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறார்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை