மேலும் செய்திகள்
சபரிமலையில் ஜன.10 வரை தரிசன முன்பதிவு நிறைவு
3 hour(s) ago
ராகுல் கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்
3 hour(s) ago
முஸ்லிம்கள் எனக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்!
3 hour(s) ago
பெங்களூரு : ''கர்நாடகாவில் சிவகுமார் போன்ற ஒரு கலைஞரை இதுவரை பார்த்ததில்லை,'' என, பெங்களூரு வடக்கு பா.ஜ., - எம்.பி., சதானந்த கவுடா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான சிறப்பு குழுவின் விசாரணை, சரியான பாதையில் செல்வதாக தெரியவில்லை. இவ்வழக்கில் சம்பந்தமுள்ள கார் ஓட்டுனர் கார்த்திக், ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? தேர்தல் நேரத்தில் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார், நடக்கவில்லை. இவை அனைத்துக்கும் சிவகுமார் தான் 'மாஸ்டர் மைண்ட்'. இவரை போன்ற கலைஞரை இதுவரை பார்த்ததில்லை.தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில், இப்படி ஒரு குறுக்குவழியில் சிடியை வெளியிடுவது கீழ்த்தரமான செயல். சில நேரங்களில் சிறிய வழக்குகள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கு சமூகத்தையே கொச்சைப்படுத்தும் முயற்சி. சிடி வெளியானபோதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இவ்வழக்கால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மை தான். குமாரசாமிக்கும், சிவகுமாருக்கும் இடையே எந்தவிதமான சண்டையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago