உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதவி பறித்தால் சந்தோஷம் சொல்கிறார் சுரேஷ் கோபி

பதவி பறித்தால் சந்தோஷம் சொல்கிறார் சுரேஷ் கோபி

கொச்சி : லோக்சபா தேர்தலில், கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.இந்நிலையில், கொச்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:திரைப்படங்களில் நடிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அனுமதி கேட்டேன்.அப்போது, 'எத்தனை படங்களில் நடிக்க உள்ளீர்கள்' என, அவர் கேட்டார். '22 படங்கள்' என, பதிலளித்தேன். யோசித்தவர், பின் அனுமதி வழங்கப்படும் என்றார்.ஒட்டக்கொம்பன் படத்தில் நடிப்பதற்கு அனுமதி கேட்டுள்ளேன். இதுவரை அனுமதி வழங்கவில்லை. அனுமதி வரவில்லை என்றாலும், செப்., 6ல் படப்பிடிப்பில் பங்கேற்பேன். படங்களில் நடிப்பதற்காக, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், காப்பாற்றப்பட்டதாகவே நான் உணர்வேன். அமைச்சராக வேண்டும் என, நான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Sugumar Kamu R
ஆக 23, 2024 11:40

இவனை தேர்ந்தெடுத்த தற்குறிகளுக்கு நல்ல ....


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 22, 2024 14:14

கூத்தாடிகள் என்றைக்குமே கூத்தாடிகள் தான். அது டிரம்ப் ஆக எம்ஜிஆர் ஜெயலலிதா ரஜனியாக கமல்ஹாசனாக யாராக இருந்தாலும் அவர்கள் என்றைக்குமே கூத்தாடிகள் தான். இவர்களை கொண்டு போய் அரண்மனையில் தலைமை பீடத்தில் வைத்தாலும் கூத்தாடத்தான் போய் விடுவார்கள். மக்களே எச்சரிக்கையுடன் இருங்கள். கூத்தாடிகள் நம்பி பின்னால் போகாதீர்கள். உங்கள் பேரக்குழந்தைகள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நாட்டையே கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்து விடுவார்கள்.


venugopal s
ஆக 22, 2024 13:12

கேரள பாஜகவில் இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்று தெரிந்து தான் இப்படி தெனாவட்டாக பேசுகிறார்!


Muralidharan raghavan
ஆக 22, 2024 13:00

சுரேஷ் கோபி வெற்றி பெற்றதற்கு காரணம் தனிப்பட்ட முறையில் மக்களுக்கு பல நல்ல காரியங்கள் செய்துள்ளார். அவர் ஒன்றும் பாஜக என்பதாலோ அல்லது திரைப்பட நடிகர் என்பதாலோ வெற்றி பெறவில்லை. ஆரம்பத்திலேயே அவர் தனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று சொன்னவர்.


Ram pollachi
ஆக 22, 2024 12:36

மக்கள் சேவகனின் பொறுப்பான பதிலை பாரீர். பிறகு எதற்கு ஊதியம் இதர படிகள், கூடவே உதவி செய்ய இரண்டு பெட்டி... ஜனநாயக நாட்டில் தேர்தல் நடத்தியே கஜானா காலியாகிவிடும்...


R S BALA
ஆக 22, 2024 11:56

என்ன ஒரு ஆணவமாக பேசுகிறார்..பாவம் இவருக்கு வாக்களித்த மக்கள்.


Nandakumar Naidu.
ஆக 22, 2024 11:48

இவனெல்லாம் MP பதவிக்கே லாயக்கு இல்லாதவன். மந்திரி பதவி வேற. சரியான தத்தி. கூத்தாடிக்கு உயர் பதவி கொடுத்தால் இப்படித்தான்.


அப்புசாமி
ஆக 22, 2024 10:26

கூத்தாடியை மந்திரியாக்கினால் இப்புடித்தான். இவரெல்லாம் எம்.பி ஆகணும்னு தலையெழுத்து.


M Ramachandran
ஆக 22, 2024 21:43

அப்போ விஜய் அரசிலுக்கு வருவதை நீஙகள் வரவேற்க வில்லை


ஆரூர் ரங்
ஆக 22, 2024 09:59

அமைச்சரவையில் கேரளாவுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் திறமையுள்ள நபர் என்பதால் வாய்ப்பளித்தது. ஆனால் ஆடின கால் ஆடாமலிருக்காது என்பது போல நடிப்பைக் கைவிட மனதில்லை. சம்பாதித்து போதும். இனியாவது தேச சேவை செய்யுங்கள்.


Tirunelveliகாரன்
ஆக 26, 2024 10:53

பிஜேபி உடன் இருந்து தேச சேவையா?


Barakat Ali
ஆக 22, 2024 09:04

எப்படியாவது ஒரு வருடம் ஒட்டிவிட்டால் பென்சன் உறுதி என்று நினைக்கிறேன் ...... அது வரை பல்லைக் கடித்துக்கொண்டு ஒட்டிவிடுவார் ......


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை