மேலும் செய்திகள்
டிராக்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிதி
56 minutes ago
சபரிமலை வருமானம் 210 கோடி
56 minutes ago
ஷிவமொகா: வமொகா ஒசநகர் சாவந்துார் கிராமத்தில் வசித்தவர் குஜப்பா, 90; இவரது மனைவி கங்கம்மா, 84. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஐந்து மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. வயதான காலத்தில் குஜப்பாவும், கங்கம்மாவும், ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் வாழ்ந்தனர். இணைபிரியாமல் இருந்தனர்.இந்நிலையில் வயோதிகம், உடல்நலக்குறைவால் நேற்று காலை, குஜப்பா இறந்தார். அவரது உடலை பார்த்து, கங்கம்மா அழுது கொண்டே இருந்தார். திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். கணவன், மனைவி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
56 minutes ago
56 minutes ago