உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீய சக்திகளை ஆதரிக்கும் காங்., பா.ஜ., தேஜஸ்வி சூர்யா பாய்ச்சல்

தீய சக்திகளை ஆதரிக்கும் காங்., பா.ஜ., தேஜஸ்வி சூர்யா பாய்ச்சல்

பெங்களூரு : ''பா.ஜ., உள்ள இடங்களில், பயங்கரவாதம் இருக்காது. காங்கிரஸ் உள்ள இடங்களில், துஷ்ட சக்திகளை ஆதரிக்கிறது,'' என பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டினார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:பா.ஜ., உள்ள இடங்களில் பயங்கரவாதம் இருக்காது. காங்கிரஸ் உள்ள இடங்களில் துஷ்ட சக்திகளை ஆதரிக்கிறது.நாட்டில் பா.ஜ., உறுதியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பயங்கரவாதிகளுக்கு பலியானோரின் எண்ணிக்கை குறைவு. பெங்களூரில் 70 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைந்துள்ளது.பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதியில், பா.ஜ., வரலாறு படைக்கும். ஐந்து லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். விஜயேந்திரா மாநில பா.ஜ., தலைவரான பின், தொண்டர்களின் உற்சாகம் அதிகரித்துள்ளது. மாவட்ட தலைவராக ராமமூர்த்தி ஆன பின், பெங்களூரு தெற்கில் கட்சியின் சக்தி அதிகரிக்கிறது.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை