உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி விசா தயாரித்த வழக்கு: விமான நிலையத்தில் ஒருவர் கைது

போலி விசா தயாரித்த வழக்கு: விமான நிலையத்தில் ஒருவர் கைது

பெங்களூரு : போலி விசா தயாரித்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர், பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில் போலி விசா பயன்படுத்தியதாக, ஹர்விந்தர் சிங் என்பவர், சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.விசாரணையில் டிராவல்ஸ் ஏஜென்ட்கள் முஸ்கான் என்கிற மன்பீரித் கவுர், சாதிக் உல்லா பை ஆகியோர், ஐந்து லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு, போலி விசா தயாரித்து கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து முஸ்கான் கைது செய்யப்பட்டார். ஆனால் சாதிக் உல்லா தப்பிவிட்டார். அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.இதன் பின்னர் சாதிக் உல்லா தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்து, அனைத்து விமான நிலையங்களுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.இந்நிலையில், சாதிக் உல்லா துபாயில் இருந்து, பெங்களூருவுக்கு விமானத்தில் வருவதாக, டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை, விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்த அவரை, டில்லி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை