உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியர்களுக்கு நல்ல செய்தி: வறுமை குறைவதாக ஆய்வறிக்கை தகவல்

இந்தியர்களுக்கு நல்ல செய்தி: வறுமை குறைவதாக ஆய்வறிக்கை தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2011 - 2012 ம் ஆண்டு இந்தியாவில் 21 சதவீதமாக இருந்த வறுமை, 2022- 24 ல் 8.5 சதவீதமாக குறைந்து உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சோனால்டி தேசாய் தலைமையிலான என்சிஏஇஆர் என்ற அறிவு சார்ந்த பொருளாதார அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை 'Rethinking Social Safety Nets in a Changing Society' என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்திய மனித வளர்ச்சி கணக்கெடுப்பு ( ஐஎச்டிஎஸ்) அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஐஎச்டிஎஸ் அடிப்படையில், இந்தியாவில் வறுமை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2004 - 2005 ல் 38.6 சதவீதமாக இருந்த வறுமை, 2011- 12 ல் 21.2 சதவீதமாக குறைந்தது. இது, கோவிட் பெருந்தொற்று ஏற்படுத்திய சவாலுக்கு மத்தியிலும் 2022- 2024 ல் மேலும் குறைந்து 8.5 சதவீதமாக குறைந்தது. பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைவு ஆகியவை வேகமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தேவைப்படும் ஒரு சூழலை உருவாக்குகிறது.பொருளாதார வளர்ச்சியின் சகாப்தத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும் போது நீண்ட காலமாக இருக்கும் வறுமை குறைய கூடும். வறுமையில் இருக்கும் மக்களை பொருளாதாரத்தில் உயர்வதற்காக வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. இதனால், வறுமை கணிசமாக குறைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஜூலை 04, 2024 22:42

பதினைந்து வருடங்களுக்கு முன்பு இருந்த அதே அளவு கோலை மாற்றாமல் அதன் படியே பார்த்தால் இப்போது பாஜக ஆட்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் யாருமே இருக்க முடியாது! வறுமைக்கோட்டுக்கான அளவுகோல் என்பது விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் மாற்றப் படவில்லை! இதுவும் பாஜகவின் வழக்கமான மோடி மஸ்தான் வேலை தான்!


Ramesh Sargam
ஜூலை 04, 2024 17:25

ஆமாம் எல்லார் கையிலும் மொபைல் போன், பிச்சை எடுப்பவர்கள் கையில் QR code scanner


Ramesh Sargam
ஜூலை 04, 2024 17:25

ஆமாம் எல்லார் கையிலும் மொபைல் போன், பிச்சை எடுப்பவர்கள் கையில் QR code scanner


Swaminathan L
ஜூலை 04, 2024 16:28

டெண்டுல்கர் கமிட்டி 2009ல் அளித்த அறிக்கைப்படி நகரங்களில் தினசரி முப்பத்து மூன்று ரூபாய், கிராமங்களில் இருபத்தேழு ரூபாய் வருமானம் இல்லாதவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை தான் 8.5% சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர்களுக்குத் தலா ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக ரேஷன்கார்டு மூலம் வழங்கப்படுகிறது ஒவ்வொரு மாதமும். இருந்தும், மேற்குறிப்பிட்ட தினசரி வருமானம் இவர்களுக்கு எவ்வகையில் போதும் என்று புரியவில்லை.


ஆரூர் ரங்
ஜூலை 04, 2024 17:13

ஜல்ஜீவன் குடிநீர், PM ஆவாஸ் வீடு, 5 லட்சம் மருத்துவக் காப்பீடு, வீட்டுக்கு வீடு கழிப்பிடம், 40 கோடி முத்ரா கடன்கள் இதையெல்லாம் சேர்த்துப் பாருங்க. புரியும் .


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 04, 2024 13:35

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடனேயே ஊ ஊ பீயிஸ் க்கு நிச்சயமா வறுமை போயிருக்கும் .... இதுக்கு ஏன் நியூசு .....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை