உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  டில்லி அரசுக்கு எதிரான போராட்டத்தில் மாவோ., தலைவருக்கு ஆதரவாக முழக்கம்; போலீசார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்ததால் பதற்றம்

 டில்லி அரசுக்கு எதிரான போராட்டத்தில் மாவோ., தலைவருக்கு ஆதரவாக முழக்கம்; போலீசார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்ததால் பதற்றம்

புதுடில்லி: டில்லியில் மோசமடைந்த காற்று மாசை தடுக்க தவறிய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில், மாவோயிஸ்ட் ஆதரவு போஸ்டர்கள் இடம் பெற்றதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க வந்த போலீசார் மீது, 'பெப்பர் ஸ்பிரே' எனப்படும் மிளகுத்துாள் தெளிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைநகர் டில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதை, முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆம் ஆத்மி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, பா.ஜ., அரசை கண்டித்து இந்தியா கேட் நோக்கி கடந்த 8ம் தேதி கண்டன பேரணி நடத்தின. அப்போது காற்று மாசு கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்நிலையில், காற்று மாசு கட்டுப்படுத்தக் கோரியும், போதிய நடவடிக்கைகள் எடுக்காத பா.ஜ., அரசை கண்டித்தும், இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடந்தது. டில்லி ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். அப்போது, சமீபத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹித்மாவின் போஸ்டர்களை துாக்கி பிடித்து போராட்டக்காரர்கள் சிலர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால், காற்று மாசு போராட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்தியா கேட் பகுதியில் பிரதான சாலையை வழிமறித்த போராட்டக்காரர்கள், போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தினர். தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், திடீரென 'பெப்பர் ஸ்பிரே'வை போலீசாரின் முகத்தில் அடித்து தாக்கினர். இதனால் அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது. இதைத் தொடர்ந்து அனுமதியின்றி இந்தியா கேட் பகுதியில் கூடியதற்காகவும், போலீசார் மீது 'பெப்பர் ஸ்பிரே' அடித்து தாக்குதல் நடத்தியதற்காகவும் வழக்கு பதிந்து, 23 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று 'பெப்பர் ஸ்பிரே' கேன்களையும் பறிமுதல் செய்தனர். காற்று மாசு தடுக்கக்கோரி நடந்த போராட்டத்தில், மாவோயிஸ்ட் ஆதரவு போஸ்டர்கள் எப்படி முளைத்தன என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 பேருக்கு, மூன்று நாள் நீதிமன்ற காவல் வழங்கி டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

யார் இந்த மத்வி ஹித்மா?

மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான மத்வி ஹித்மா, போலீசாரால் தேடப்பட்டு வந்தவர். ஆந்திராவில் நடந்த நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது, கடந்த 18ம் தேதி போலீசார் இவரை சுட்டுக் கொன்றனர். இதனால், ஆவேசமடைந்த அவரது ஆதரவாளர்கள், டில்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஒருவர், 'ஹித்மா பழங்குடியின நபர். தன் இன மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்தியவர். ஆயுதப் போராட்டம் ஏற்கத்தக்கதல்ல. அதற்காக அவரை சுட்டுக் கொன்றதை ஏற்க முடியாது' என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

KavikumarRam
நவ 25, 2025 13:58

இது எல்லாமே நம் அண்டை சில்லறை நாடுகளில் நடைபெற்ற zen z போராட்டம் மாதிரி இந்திய அளவில் தூண்டிவிடும் அந்நிய சக்திகளின் தூண்டுதல். காற்று மாசு கட்டுப்படுத்த சொல்லி போராட வேண்டியது தார்மீக கடமை தான். மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதனுள் ஊடுருவி இருக்கும் மாவோயிஸ்ட் குரல், பெப்பர் ஸ்ப்ரே எல்லாம் தான் முக்கியமாக கவனித்து முளையிலேயே கிள்ளி எறியவேண்டிய விஷயம்.


M Ramachandran
நவ 25, 2025 13:12

இல்லாவிட்டால் நாட்டு பற்றற்ற இந்த கம்யூனிஸ்டுகள் பின்னாடி செல்வார்களா?


GoK
நவ 25, 2025 12:06

மாவோ சீன நாட்டிலேயே இல்லை இதற்க்கு இங்கு ஆதரவு கொடுக்கும் அயோகியர்களை போட்டுதள்ளுங்க இவனுங்க ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் மாணவங்கிற போர்வைலே பதுங்கி இருக்கும் சதிகாரனுங்க.


Anand
நவ 25, 2025 10:19

மாவோயிஸ்டுக்களை என்கவுண்டர் செய்தது போல அவுங்களுக்கு ஆதரவானவர்களையும் தயவு தாட்சண்யம் இன்றி என்கவுன்ட்டர் செய்துவிடவும். பிறகு எல்லாம் தானாக சரியாகிவிடும்.


Sudha
நவ 25, 2025 10:12

பலமுறை சொல்லி வருகிறேன், டெல்லி ராசியான நகரம் அல்ல, இந்தியாவின் தலைநகராக உஜ்ஜைன், போபால் போன்ற மத்திய நகரங்களை தயார் படுத்தலாம், பழம் பெருச்சாளிகள் கூட்டம் அழியும்


Chandhra Mouleeswaran MK
நவ 25, 2025 08:50

தேர்த் திருவிழாக்களின் போதும் வாரச் சந்தைகளின் போதும் தங்கள் கட்சிக் கூட்டங்களை நடத்தி, உண்டியல் குலுக்கும் இந்த ஐம்பது கோடிப் பிச்சைக்காரக் கட்சி எங்கிருந்தாலும் அங்கே ஒன்றே முக்கால் செங்கொடிகளைப் பிடித்துக் கொண்டு, அட்டைகளாக் ஒட்டிக் கொள்வான்கள் தேர்க்கூட்டம் சந்தைக் கூட்டம் எல்லாம் தங்களுக்காக வந்திருக்கும் "பாட்டளி வர்க்கத் தொண்டர் கூட்டம் செம்படை" என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வான்கள் தமிழ்நாட்டு "200 ருப்பீஸ் பேட்டா + 5 ருப்பீஸ் ஊறுகாய் டிப்ஸ்" உப்பீஸ் மாதிரி இவன்களின் கூட்டம் எப்போதுமே, "டீ + வடை + குஸ்கா" கொடுத்தால் வந்து விடும் பாட்டாளி மக்கள் உரிமையாவது பருத்திக் கொட்டைப் புண்ணாக்காவது"


தலைவன்
நவ 25, 2025 10:15

செங்கொடி நீங்கள் வைத்திருக்கும் ஊழல் பணத்தில் முளைத்தது அல்ல? ரத்ததாலும் உழைக்கும் மக்களின் வேர்வையினாலும் உருவானது?? அதிகார, ஆணவ தொனியில் திரியும் தீயவரை குலை நடுங்க வைக்கும் கொடி அதுதான் செங்கொடி. வன்முறை நமது மொழி அல்ல? ஆனால் அந்த மொழியும் எங்களுக்கு தெரியும் என சிலர் புரிய வைத்து இருக்கிறார்கள்.


RAMAKRISHNAN NATESAN
நவ 25, 2025 12:11

போதை ஹராம் தானே ?


Ramesh Trichy
நவ 25, 2025 14:18

தலைவன், தமிழ்நாட்டில் பெட்டி வாங்குனது நினைவு இல்லையோ?


Thravisham
நவ 25, 2025 16:16

தலைவன் என்ற பேர்ல ஓர் தகர உண்டி


GMM
நவ 25, 2025 08:39

டெல்லி மோசமடைந்த சுற்று சூழலை தடுக்க போராட்ட குழு ஆலோசனை கூற முடியும். என்ன கொள்கை வகுக்க வேண்டும் என்று சொல்க. சிறை தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். போராட்டம் அல்ல. கலவரம்.


Suppan
நவ 25, 2025 16:02

செங்கொடி மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் ஊழல் கொடியாக மாறி பல காலம் ஆகிவிட்டது. செங்கொடி கலாச்சாரம் வழக்கொழிந்து பல காலம் ஆகிவிட்டது ஐயா. சீனாவிலேயே முதலாளித்துவம்தான் கொடி கட்டிப்பறக்கின்றது. இங்கே இன்னும் சீனாவுக்கு வால் பிடித்துக்கொண்டிருக்கும் "அப்பாவிகளை" என்னவென்று சொல்ல


நிக்கோல்தாம்சன்
நவ 25, 2025 08:20

ஹிடமா மாதிரியான கொலைகாரர்கள் இந்த கூட்டத்தில் புகுந்து இவர்களையும் ஹித்மாவின் ஆயுதங்களை உபயோகப்படுத்தினால் இவர்களுக்கு என்னாகும் என்று புரியும் வண்ணம் சில நடவடிக்கைகள் நடந்தால் போதும்


Barakat Ali
நவ 25, 2025 07:45

எல்லைப்பாதுகாப்பில் நமது வீரர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்ய நிரந்தரமாகப் பணியமர்த்துங்கள் ....


R. SUKUMAR CHEZHIAN
நவ 25, 2025 06:21

இந்த இடதுசாரி சிந்தனை கொண்ட சமூகவிரோத தேசதுரோக கூட்டங்கள் தான் இந்த மாவோயிஸ்ட் அன்னிய கைக்கூலி அர்பன் நக்சல்கள் இவர்களை முதலில் என்கவுண்டரில் போட்டு தல்லவேண்டும் இந்த நாதாரிகள் பாரத தேச அமைதிக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பவர்கள். தொடர்ந்து பொய்களை கூறி இளஞ்சர்களை தவறாக வழிநடத்துபவர்கள்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை