உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 10 வயதுக்குள் 50 முறை அய்யப்பனை தரிசித்த சிறுமி

10 வயதுக்குள் 50 முறை அய்யப்பனை தரிசித்த சிறுமி

சபரிமலை: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த, 10 வயது சிறுமி, 50 முறை சபரிமலை சென்று அய்யப்பனை வணங்கி புண்ணியம் தேடி உள்ளார்.கொல்லம் ஏழுகோனை சேர்ந்தவர் அபிலாஷ் மணி. தீவிர அய்யப்ப பக்தர். இவரது மகள் அத்ரிதி, 10. இவர், 9 மாத குழந்தையாக இருந்த போது அபிலாஷ் தனது கையில் தாங்கி சபரிமலை வந்து அய்யப்பனை தரிசனம் செய்தார்.அது முதல் நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் மகளை அழைத்து சபரிமலை வந்து தரிசனம் செய்தார். மண்டல, மகர பூஜை காலம் மட்டுமல்லாமல் மாத பூஜை, சித்திரை விசு போன்ற எல்லா பூஜை காலங்களிலும் மாலையணிந்து மகளை தவறாமல் அழைத்து வந்தார். அத்ரிதியும் மகிழ்ச்சியுடன் சபரிமலை பயணம் மேற்கொண்டார் . எருமேலியில் பேட்டை துள்ளல் இவருக்கு குதுாகலத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், அத்ரிதிக்கு 10 வயது முடிய ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், நேற்று முன்தினம் சபரிமலை வந்து அய்யப்பனை வணங்கினார்.இது அவரது, 50வது சபரிமலை பயணமாகும். சன்னிதானத்தின் முன்புறம் நின்று போட்டோ எடுத்துக் கொண்ட அவர், அய்யப்பனை 50 முறை பார்த்து வணங்கியது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று குறிப்பிட்டார்.இனி, 50 வயதுக்கு பின்னர் இங்கு மீண்டும் வருவேன் என, தெரிவித்தார். இவர் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார்.பொதுவாக, சபரிமலைக்கு 18 முறை வருபவர்கள் குரு சுவாமி என்று அழைக்கப்படுகின்றனர். 18 முறை சபரிமலை வந்ததின் அடையாளமாக அந்த பக்தர் சன்னிதானத்தில் பின்புறம் உள்ள பஸ்மகுளம் அருகே தென்னங்கன்றுகளை நடவு செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

JSA
ஜன 06, 2024 09:28

9 மாத குழந்தை ஐயப்பனை பார்த்ததா என்பதை விட ஐயப்பன் அந்த குழந்தைக்கு அந்த வயதிலேயே தரிசனம் தந்தார் என்பது தான் இங்கு ஆசீர்வாதம். இதனால் என்ன பலன் என்பவர்களுக்கு என் பதில் இந்த தரிசனம் தவிர வேறு பலனும் வாழ்க்கையில் உள்ளதோ என்பது தான். அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் ஒரு இறையுணர்வு எப்படி எல்லோருக்கும் கிடைக்கும்?


சோழநாடன்
ஜன 05, 2024 23:20

பத்து வருடத்தில் 50 முறை ஐயப்பனை தரிசனம் செய்தேன் என்பது நம்புபடியா இருக்கிறது. இத்தனை முறை சந்தித்து இந்த சிறுமி பெற்ற ஏற்றம் என்ன? எல்லாம் ஒரு விளம்பரம்தான்....


Priyan Vadanad
ஜன 05, 2024 22:16

இந்தியா வல்லரசாக மாறக்கூடிய ரொம்ப முக்கியமான செய்தி.


Ranjani
ஜன 05, 2024 21:53

வாழ்த்துக்கள்


krishnamurthy
ஜன 05, 2024 19:18

ஐம்பது முறை சபரிமலை சென்ற இவர் எல்லோருக்குமே குரு. வணங்குகிறேன்


Sakthi Parthasarathy
ஜன 05, 2024 18:17

வாழ்த்துக்கள் குட்டிமா. இத்தனை முறை காணும் வாய்ப்பு கிடைத்த குழந்தைக்கு 50 வயது வரை வாய்ப்பு மறுக்கபடுவது சரியா


J.Isaac
ஜன 05, 2024 18:03

அதனால் கிடைத்த மாற்றம் ?


jayvee
ஜன 05, 2024 13:47

இந்த குழந்தைக்கு இருக்கும் அறிவு கூட சில...ளுக்கும் இல்லை.. இந்த குழந்தை தெளிவாக சொல்லிவிட்டது இந்த ஐம்பது வயதிற்கு பிறகுதான் திரும்பிவருவேன் என்று ..


PR Makudeswaran
ஜன 05, 2024 11:41

திரு ராம் சொல்வது சரி தானே


சிவா
ஜன 05, 2024 11:11

என்ன தவம் செய்தனையோ மகளே !


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை