உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையோர கடைகளை முறைப்படுத்த நடவடிக்கை; நகராட்சி ஆணையர் கந்தசாமி தகவல்

சாலையோர கடைகளை முறைப்படுத்த நடவடிக்கை; நகராட்சி ஆணையர் கந்தசாமி தகவல்

புதுச்சேரி : நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் சாலையோரக் கடைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: புதுச்சேரி நகராட்சியில் கடந்த 2023ம் ஆண்டு நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக சாலையோர கடைகள்முறைப்படுத்தி, கடைகளுக்கான உரிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். சாலையோர கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கி, நகர வியாபார குழுக்கு, தேர்தல் நடத்த வேண்டும். அக்குழுவில் நகராட்சி, போலீஸ் இடம்பெறுவர்.அக்குழுவினர் சாலையோர வியாபாரத்திற்கான இடங்களை தேர்வு செய்வர். புதுச்சேரியில் 1,300 சாலையோர வியாபாரிகள் இருப்பது தெரியவந்துள்ளது. வியாபாரிகளின் பெயர் பட்டியலில் பலரது பெயர் விடுப்பட்டதாக புகார் கூறியதால், சாலையோர வியாபாரிகள் பதிவு காலம் நீட்டிக்கப்பட்டது.பெயர் பதிவு முடிந்ததும், வியாபார குழுக்கான தேர்தல் நடக்கும். நகர்புற வாழ்வாதார திட்டத்தின்படி சாலையோர வியாபாரத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டால், அவரவர் இஷ்டத்திற்கு சாலையோரம் வியாபாரம் செய்ய முடியாது.மக்களும், நடைபாதை வாசிகளுக்கும் இடையூறு இன்றி சாலையோர வியாபாரம் ஒழுங்குப்படுத்தப்படும்.தற்போது சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஓரிரு மாதங்களில் உரிய இடங்கள் வழங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி