உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது

பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது

அரியாங்குப்பம், : தவளக்குப்பம் அருகே 180 ஆண்டு பழமை வாய்ந்த அம்மன் கோவில் வேப்ப மரம் வேறுரோடு சாய்ந்தது. தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் பகுதியில் பொரையாத்தம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே 180 ஆண்டு பழமையான வேப்ப மரம் இருந்து. இந்த மர நிழலின் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாடுவது, பெரியோர்கள் ஓய்வெடுத்து வந்தனர்.இந்நிலையில், மூன்று தலைமுறையாக இருந்த இந்த வேப்ப மரம் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் மழை பெய்த நிலையில் வேரோடு சாய்ந்தது. அப்பகுதியில் யாரும் இல்லாமல் இருந்ததால், பாதிப்பு ஏற்படவில்லை.நிழலுக்கு உதவியாகவும், பல ஆண்டுகளாக இருந்த மரம் கீழே சாய்ந்ததால், அப்பகுதி மக்கள் வேதனையுடன் பார்த்து சென்றனர். அதனால், மரம் சாய்ந்த சம்பவம் அப்பகுதி மக்கள் பேசும் பொருளானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ