உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதிதாசன் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி  

பாரதிதாசன் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி  

புதுச்சேரி : புதுச்சேரியில், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பிப்டிக் (புதுச்சேரி தொழில்துறை மேம்பாட்டு வளர்ச்சி முதலீட்டு கழகம்) மற்றும் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியின் மனையியல் துறை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் மனையியல் துறை தலைவர் தனலட்சுமி வரவேற்றார்.பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் ராஜி சுகுமார், விருந்தினர்களை கவுரவித்தார். பிப்டிக் பொது மேலாளர் ராகினி வாழ்த்துரை வழங்கினார்.இந்தியன் வங்கி தலைமை மாவட்ட மேலாளர் சதீஷ்குமார், வங்கிகளின் பங்களிப்பு குறித்து விளக்கி கூறினார். பிரதமரின் திட்டம் பற்றியும் குமணன் பேசினார். அபேல் ரோசாரியோ நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் பாரதிதாசன் மனையியல் துறை இளங்கலை மாணவியர், காஞ்சி மாமுனிவர் முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மனையியல் துறை முதுகலை மாணவியர், தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் முன்னாள் மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை