உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி மாணவர்களின் உரிமை தொடர்ந்து பறிப்பு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு

புதுச்சேரி மாணவர்களின் உரிமை தொடர்ந்து பறிப்பு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு

புதுச்சேரி: தனியார் கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை வாங்காமல் புதுச்சேரி மாணவர்களின் உரிமை பறிக்கப்படுவதாக சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டினர்.புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் மானிய கோரிக்கையின்போது தி.மு.க., காங்., எம்.எல்.ஏக்களை தொடர்ந்து, சுயேச்சை எம்.எல்.ஏக்கள் நேரு, அங்காளன் ஆகியோர்வெளிநடப்பு செய்தனர்.பின், இருவரும் கூறியதாவது:புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத சீட்டினை பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் அரசு ஒவ்வொரு ஆண்டும் பேரம் பேசி தான் சீட்டுகளை வாங்கி வருகிறது. சென்டாக் மூலம் சேரும் மாணவர்களிடம் எந்த பில்லும் இல்லாமல் கூடுதலாக வாங்குகின்றனர். அரசு தடுக்காமல் மவுனம் காக்கிறது.செங்கல்பட்டு மருத்துவ கல்லுாரியில் வெறும் 13 ஆயிரம் கட்டி மருத்துவ படிப்பு படிக்கின்றனர். ஆனால் புதுச்சேரியில் 1.5 லட்சம் ரூபாய் அரசு மருத்துவ கல்லுாரியில் கட்டணம் வாங்குகின்றனர். மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களின் உரிமை தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தே வெளிநடப்பு செய்தோம். இந்தாண்டு தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை அரசு பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை