உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காமராஜர் பிறந்தநாள் விழா 

காமராஜர் பிறந்தநாள் விழா 

திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளி யில் காமராஜர் 122வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, பள்ளியின் நிர்வாகியும், முதல்வருமான சம்பத் தலைமை தாங்கி, காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செய்தார்.தொடர்ந்து, காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை மேற்கோள்காட்டி, சொற்பொழிவு, கவிதை, பாடல் உள்ளிட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.பின்னர், மாணவர்களுக்கு இடையே பேச்சு, கட்டுரை எழுதுதல், கவிதை வாசித்தல், ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் சம்பத் பரிசுகள் வழங்கினார்.நிர்வாக இயக்குனர் ஹரிஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சமுதாய நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்