உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மது போதையில் ரகளை செய்த வாலிபருக்கு நுாதன தண்டனை

மது போதையில் ரகளை செய்த வாலிபருக்கு நுாதன தண்டனை

புதுச்சேரி : அரசு மருத்துவமனையில் மது போதையில் ரகளை செய்த வாலிபரை, போலீசார் முட்டிப்போட வைத்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.புதுச்சேரி அரசு மருத்துமனையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மது போதையில், ஒருவர் இரவு பணிக்கு வந்த டாக்டரை கத்தியால் வெட்டினார். அதை கண்டித்து, டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் வெளியே வாலிபர் ஒருவர் மது போதையில் ரகளை செய்து கொண்டிருந்தார். மருத்துவமனையில் பணியில் இருந்து பெண் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவரது சகோதரி, பிரசவத்திற்கு அனுமதிப்பட்டுள்ளார். அவரை பார்க்க வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் முட்டிப் போட வைத்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை