உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தபால் ஓட்டு 96.36 சதவீதம்

தபால் ஓட்டு 96.36 சதவீதம்

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டோர், ஊனத்தின் தன்மை 40 சதவீதத்திற்கு மேலுள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளில் உள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்தே ஓட்டளிப்பதற்கான உரிமையை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது.புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள இவர்களின் ஓட்டுகள் பெறும் பணி கடந்த 2ம் தேதி துவங்கி, 6ம் தேதி வரை நடந்தது.85 வயதுடையோரில் விண்ணப்பித்த 1,609 பேரில் 1,529 பேர் ஓட்டளித்தனர். ஓட்டு சதவீதம் 94.29. மாற்றுத்திறனாளிகளில் விண்ணப்பித்த 1,322 பேரில் 1,294 பேர் ஓட்டளித்தனர். அதன் சதவீதம் 97.67. முக்கிய பணிகளில் இருந்து விண்ணப்பித்த 43 பேரும் வாக்களித்தனர். மொத்தமாக விண்ணப்பித்த 2,974 பேரில் 2,866 பேர் ஓட்டளித்தனர். இது 96.36 சதவீதம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை