உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜவுளிக்கடை ஊழியர் தற்கொலை

ஜவுளிக்கடை ஊழியர் தற்கொலை

புதுச்சேரி : மனைவியிடம் ஏற்பட்ட பிரச்னையில் ஜவுளிக்கடை ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் ஏசுதாஸ், 32; ஜவுளிக்கடை ஊழியர். அவரது மனைவி விஜயா சில்பா, 28. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஏசுதாஸ் கடந்த சில ஆண்டுகளாக மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது.இந்நிலையில் வீட்டில் ஏசுதாஸ் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை