உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீ வைத்து எரிக்கப்பட்ட வி.சி., நிர்வாகி சாவு

தீ வைத்து எரிக்கப்பட்ட வி.சி., நிர்வாகி சாவு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட வி.சி., நிர்வாகி சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா எறையூரை சேர்ந்தவர் சின்னதம்பி. இவர் தனது மனைவியுடன் தகராறு செய்ததை அதே பகுதியை சேர்ந்த வி.சி., கிழக்கு மாவட்ட அமைப்பாளரான சூசைநாதன், 49; கண்டித்து தாக்கினார்.அதில் ஆத்திரமடைந்த சின்னதம்பி, கடந்த 30ம் தேதி இரவு வீட்டின் வௌியே துாங்கிய சூசைநாதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றார்.அதில் படுகாயமடைந்த சூசைநாதனை குடும்பத்தார் மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.அதனைத் தொடர்ந்து எலவனாசூர்கோட்டை போலீசார் ஏற்கனவே பதிவு செய்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை