தி.மு.க., மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்புதுச்சேரி: பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கும் மகளிர் கொள்கை புதுச்சேரியில் உருவாக்க வேண்டும் என தி.மு.க., மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதுச்சேரி தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது. மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி தலைமை தாங்கினார். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சுமதி வரவேற்றார்.மாநில அவை தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத் முன்னிலை வகித்தனர். எதிர்கட்சி தலைவர் சிவா, மகளிர் அணி செயலாளர் ஹெலன்டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கவும், கல்வி, திறன் வளர்ப்பு, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சியில் முன்னிலை அளிக்க தமிழகத்தில் சமீபத்தில் கொண்டு வந்த மகளிர் கொள்கை போன்று புதுச்சேரியில் மகளிர் கொள்கையை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்,மகளிர் ஆணையம், குழந்தைகள் நல ஆணையம், மத்திய அரசின் பெண்கள் ஆலோசனை வாரியத்தை மீட்டெடுத்து செயல்படுத்த வேண்டும்.வீட்டுவேலை, கடை பணி, தொழிற்சாலை, துப்புரவு பணியில் ஈடுப்படும் பெண்களுக்கு முறையான சம்பளம், வழங்கவேண்டும், ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், புதிய தொழிற்கொள்கையில் பெண்களுக்கு 50 சதவீத வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.