உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தை பள்ளி துணை முதல்வர் சித்ரா துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் குணசெல்வி, பொறுப்பாசிரியர் ஸ்ரீதரன் ஆகியோர் ஊர்வலத்தை வழி நடத்தினர். தன்னம்பிக்கை கலைக் குழுவை சேர்ந்த எலிசபெத் ராணி, நந்தகோபால் ஆகியோர் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியினை நடத்தினர்.தொடர்ந்து மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தி சென்றனர். ஊர்வலம் கரிக்கலாம்பாக்கம் முக்கிய வீதியாக சென்று பள்ளியை வந்தடைந்தது.ஏற்பாடுகளை ஆசிரியர் நான்சி ஏஞ்சலின், நுாலக ஆசிரியர் கருணாநத்தன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை