உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்லக் கூடாது

ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்லக் கூடாது

புதுச்சேரி: லோக்சபா தேர்தலையொட்டி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:2024ம் ஆண்டு லோக்சபா பொது தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தல் அறிவிப்புக்கு பின் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி சோதனை செய்யும்போது 50 ஆயிரம் ரூபாய் மேல் எடுத்து செல்ல கூடாது. மேலும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுவரொட்டிகள்,தேர்தல் பொருட்கள்,மதுபானம் அல்லது பரிசு பொருட்களை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.வாகனத்தின் வேறு ஏதேனும் சட்ட விரோத பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டால் பரிமுதல் செய்ய வேண்டும். எந்த ஒரு நட்சத்திர பேச்சாளரும் 1 லட்சம் வரை கட்சியின் பொருளாளரிடமிருந்து சான்றிதழ் உடன் எடுத்து செல்லலாம்.அது பறிமுதல் செய்யப்படாது.10 லட்சத்திற்கு பணமாக வாகனத்தில் இருந்தால் அந்த பணம் வருமான வரி சட்டங்களின் தேவையான நடவடிக்கைக்காக வருமான வரி ஆணையத்திற்கு அனுப்பப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி