உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாசவி பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம்

வாசவி பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் வரும் 4ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.தமிழ்நாடு ஆரிய வைசிய மகா சபா, புதுச்சேரி ஆரிய வைசிய கல்வி அறக்கட்டளை, ஈக்வேடாஸ் வளர்ச்சி முகமை அறக்கட்டளை இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் வரும் 4ம் தேதி வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் நடக்கிறது.முகாம், காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது. முகாமை, அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.முகாமில், இந்தியாவில் இருந்து 80க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், பத்தாம் வகுப்பு முதல், இன்ஜினியரிங், பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.ஏற்பாடுகளை, தமிழ்நாடு ஆரியவைசிய மகா சபா தலைவர் ராமசுப்ரமணி, வாசவி இன்டர்நேஷனல் பள்ளி தலைவர் வேணுகோபால், பொருளாளர் சற்குருநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை