உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு

பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு

திருக்கனுார்: சோரப்பட்டுஅரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடந்தது.தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கி, மாணவர்கள் கடந்த அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டிய முக்கிய ஆலோசனைகள் வழங்கினார்.தொடர்ந்து, ஆசிரியர்கள் விஜேஷ், ஏஞ்சல் மேரி, சடகோபன், சூரியகுமாரி, ராஜேந்திரன், மாணிக்கவேல், முருகன், மோகன் ஆகியோர் மாணவர்களின் தற்போதைய கல்வித்தரம் குறித்து பெற்றோர்களிடம் எடுத்துரைத்தனர். பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், அலுவலக ஊழியர் மாவீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை