உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாரி மோதி இறந்தவர் யார் போலீசார் விசாரணை

லாரி மோதி இறந்தவர் யார் போலீசார் விசாரணை

புதுச்சேரி, : ஜிப்மர் மருத்துவமனை எதிரே லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் இறந்தார்.திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலுார் பகுதிக்கு லாரி சென்று கொண்டிருந்தது. ஜிப்மர் மருத்துவமனை அருகே வந்தபோது, மருத்துவமனையில் இருந்து கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் மீது லாரி மோதியது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்த கோரிமேடு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி