உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செய்தியாளர்கள் சந்திப்பு: கவர்னர் புறக்கணிப்பு

செய்தியாளர்கள் சந்திப்பு: கவர்னர் புறக்கணிப்பு

புதுச்சேரி : அரசு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்து காரில் ஏறி, புறப்பட்டார்.புதுச்சேரி கவர்னர் தமிழிசை எந்த நிகழ்வில் பங்கேற்றாலும் செய்தியாளரை சந்திப்பதை தவிர்ப்பது இல்லை. செய்தியாளர் சந்திப்பை ஆர்வத்துடன் வரவேற்கும் அவர், தற்போது செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து வருகிறார்.நேற்று கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்த கைவினை கண்காட்சியை துவக்கி வைத்த அவர், செய்தியாளர்சந்திப்பை புறக்கணித்து அவசர அவசரமாக காரில் ஏறி, புறப்பட்டார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமியிடம் லோக்சபா தேர்தலில் போட்டிட பா.ஜ.,வும், என்.ஆர்.காங்., கட்சியும் விருப்பம் தெரிவித்துள்ளன. அதனால் எந்த கட்சி போட்டியிடும் என கேள்வி எழுப்பியதற்கு,ஒவ்வொரு கட்சியும் அவர்கள் போட்டியிட வேண்டும் என தான் விரும்புவார்கள்.இது எப்போதும் உண்டு. அப்படி தான் இப்போதும்' என, கூறி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை