உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நலிவுற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கல்

 நலிவுற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த சாத்தமங்கலம், சாத்தமங்கலம், உருவையாறு, மங்கலம், வில்லியனூர், பொறையூர், மணலிபேட் ஆகிய கிராமங்களை சேர்ந்த நலிவுற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலாப்பட்டு கெம்பேப் அல்கலீஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறை துணை பொது மேலாளர் கண்ணப்பன், சிவில் துறை மேலாளர் இளங்கோவன், மனிதவள நிர்வாகி ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். அன்னபிரதோக் ஷனா சேவை அறக்கட்டளை நிறுவனர் பிரவீன் முன்னிலை வகித்தனர். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஸ்பிரேயர், 30 கிலோ விதைகள், பஞ்சகாவ்யம், மீன் அமிலம் உள்ளிட்ட மொத்தம் 20 வகையான வேளாண் இடுபொருட்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன. சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் காலாப்பட்டு கெம்பேப் அல்கலைஸ் நிறுவனம் அன்னபிரதோக் ஷனா சேவை அறக்கட்டளை இணைந்து வழங்கின. தொடர்ந்து நடந்த விவசாயிகள் கலந்துரையாடலில் உழவன் குடில் நிறுவனத்தின் நிறுவனர் முத்து இயற்கை வேளாண்மை, நிலையான விவசாய முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் லோகேஷ், சத்யா ஒருங்கிணைத்தனர். ஏற்பாடுகளை நாகராஜ், தேவராஜ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை