உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாடித்தோட்ட காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்

மாடித்தோட்ட காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகம் சார்பில்,பெண்களுக்கு மாடிதோட்டம் அமைத்து, காய்கறி சாகுபடி பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் அலுவலர் தினகரன் வரவேற்றார்.பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான் முகாமை துவக்கி வைத்தார். துணை வேளாண் இயக்குனர் குமரவேல் முன்னிலை வகித்தார். வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் குழித்தட்டு மூலமாக எவ்வாறு விதைகளை நடுவது, அது வளர்ந்த பிறகு ஜாடிகளில் மாற்றி வைத்து உரமிடுவது குறித்து பெண்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். 20க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் கீரை விதைகள் தொகுப்பு, மண்புழு உரம், வேப்ப எண்ணெய், குரோ பேக்மற்றும் ஸ்பிரேயர் ஆத்மா திட்டம் மூலம் இலவசமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கிருஷ்ணன், உதவியாளர்கள் குமணன், தம்புசாமி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை